Friday, November 22, 2024
Homeபொழுது போக்குசிறுவர் சமையல்அகத்திக் கீரை பொரியல் Akaththi - Vegetable hummingbird

அகத்திக் கீரை பொரியல் Akaththi – Vegetable hummingbird

- Advertisement -

Akaththi – Vegetable hummingbird அகத்திக் கீரை பொரியல்

- Advertisement -

அகத்திக்கீரை உலகில் அதிக பிரதேசங்களில் பயிரிடப் படுகிறது
இதன் இருப்பிடம் மலேசியா எனக் குறிப்பிடுகிறார்கள்.

இக் கீரையை அழகுக்காகவும், உணவுக்காகவும், கால்நடை தீவனத்திற்காகவும் வளர்க்கின்றனர். அகத்தியில் சாழை அகத்தி, பேரகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி என்ற மூன்று அகத்திகளும் உணவுக்காகப் பயன்படுத்தப் படுவதில்லை.

- Advertisement -

உண்ணும் அகத்தியில் இரண்டு அகத்திகளே உள்ளன. ஒன்று வெள்ளை நிறப் பூக்களை உடையது. இதனையே பொதுவாக அகத்தி என்ற பெயரால் குறிப்பிடுவார்கள். மற்றொன்று செந்நிறப் பூக்களை உடையது இதனைச் செவ்வகத்தியென அழைப்பார்கள்.

- Advertisement -
Akaththi - Vegetable hummingbird அகத்திக் கீரை பொரியல்
Akaththi – Vegetable hummingbird அகத்திக் கீரை பொரியல்

பொதுவாக அகத்தியும், செவ்வகத்தியுமே உணவாக, மருந்தாகப் பயன்படுகின்றன. அகத்தி மரம்போன்று 6 முதல் 9 மீட்டர் (20 அடி முதல் 30 அடி) உயரம் வளர்ந்த போதிலும் இது செடி இனைத்தைச் சேர்ந்ததே ஆகும். மிக விரைவில் வளரக்கூடிய பயிர் வகையைச் சார்ந்தது. அகத்திக் கீரை உணவாகப் பயன்படுகிறது. இக்கீரையை வேகவைத்து உண்பர்.

அகத்திக் கீரை பொரியல் தேவையான பொருட்கள்

அகத்திக் கீரை – 4 கப்
தேங்காய் எண்ணெய்- 1 மேஜைக்கரண்டி
கடுகு, – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு-1 தேக்கரண்டி
வெங்காயம் & 1
பூண்டு – 6 பற்கள்
காய்ந்த மிளகாய் & 3
உப்பு – தேவையான அளவு
தேங்காய் – (துருவியது)

அகத்திக் கீரை பொரியல் செய்முறை

அகத்திக் கீரையை எடுத்துக் கொள்ளவும். அதிலுள்ள இலைகளை தனியே எடுத்து நீரில் நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர், தேவையான பொருட்களான பூண்டு மற்றும் வத்தல் மிளகாயை எடுத்துக்கொள்ளவும். அதை மிக்சியில் போட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

பின்பு எண்ணெய் சூடாக்கி கடுகு மற்றும் உழுத்தம் பருப்பை தாளிக்கவும். அடுத்ததாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். சிறிது நேரம் வதக்கவும்.பின்பு அரைத்த பூண்டு மற்றும் வத்தல் மிளகாயை சேர்க்கவும். சிறிது நேரம் வதக்கவும். பின்பு சுத்தம் செய்த கீரையை சேர்த்துக் கொள்ளவும். நன்கு கிளறவும்.

கீரை வெந்தவுடன், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.நன்கு கிளறவும். பின்பு தேங்காய் துருவல் சேர்க்கவும். மறுபடியும்,நன்கு கிளறவும். அகத்திக் கீரை பொரியல் தயார்.

 

Kidhours – Akaththi – Vegetable hummingbird , Akaththi greens cooking , Akaththi Fries in tamil

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.