Tamil Literature History , தமிழ் இலக்கிய வரலாற்று ,சிறுவர் கட்டுரை Tamil Literature History Short essay in tamil
தமிழ் இலக்கியம் காலந்தோறும் பொருளாலும் வடிவாலும் வேறுபடுகிறது. காரணம் புலவர்கள் புதுமையை விரும்புகின்றனர். மக்களும் புதிய கருத்துகளை எதிர்பார்க்கின்றனர்.
சங்க இலக்கியம் தமிழ் இலக்கியத்திற்கே ஊற்று, மூலதனம் என்றும் கூறலாம். அவர்கள் தொட்ட எல்லையை யாரும் எந்தக் காலத்திலும் தொட முடியாத நிலைக்கு எட்டிவிட்டது. அதனை அடுத்து எழுந்த ஒப்புயர்வற்ற நூல் திருக்குறள். தமிழர்களின் உயர்ந்த சிந்தனைகளைப் பதிவு செய்து அறவொழுக்கத்தையும் வாழ்வியல் நெறிகளையும் கூறுகிறது; “சிந்தனைக் கதிர்” என்று இதனைக் கூறலாம்.
இளங்கோவின் சிலப்பதிகாரமும், கம்பனின் இராம காவியமும் அரியபடைப்புகள்; காலந்தோறும் புதிய இலக்கியங்கள் தோன்றி வளர்ந்தன. அவை அழியாமல் போற்றப்படுகின்றன. அண்மையில் உரைநடை நூல்கள் அறிவு விளக்க நூல்களாக விளங்குகின்றன; நாளிதழ்கள் தமிழைப் பரப்புகின்றன.
இலக்கியம் அறிவதற்கு ஒரு வரலாறு தேவைப்படுகிறது. பல அறிஞர்கள் இத்துறையில் ஆய்வு செய்து வரலாறு எழுதி உள்ளனர். அவற்றைச் சுருக்கமாகக் கூறும் முயற்சியே இது. அளவில் சிறியது ஆயினும் விளைவில் பெரியதே; அடிப்படைச் செய்திகள் அனைத்தும் கொண்டு விளங்குகிறது. தமிழ் இலக்கிய வரலாற்றை அறிவதற்கும், இலக்கிய அறிமுகம் பெறுவதற்கும், மாணவர்களுக்கும், மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் வெளியிடப்படுகிறது.
தமிழ் மொழியின் தோற்றம் பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். உலகின் மிகப் பழமையான தமிழ் மொழியில் ஆரம்பகால தொடக்கம் இன்றுவரை பல்வேறு இலக்கியங்கள் தோற்றம் பெற்றுள்ளன.
இந்த இலக்கியங்கள் தமிழ் பேசுகின்ற மக்களின் பழமை வாய்ந்த வாழ்க்கை முறை, கடவுள் வழிபாடு, கலாச்சாரம், அரசாட்சி, பொருளாதாரம், கல்வி நிலைமை போன்ற பல்வேறு விடயங்களை மிக அழகாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறுகின்றன.
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மொழியில் தோற்றம் பெற்ற இலக்கியமான அகத்தியம், அக்காலத்திலேயே இயல், இசை, நாடகம், இலக்கணம் போன்றவற்றின் அமைவுகளை கூறியுள்ளமை தமிழிலக்கியங்களின் தனிச்சிறப்பாகும்.
தமிழ் இலக்கியத்தின் வரலாற்றை பின்வரும் காலங்களில் அடிப்படையில் நோக்கலாம்.
1.சங்ககாலம்
2.சங்கமருவிய காலம்
3.பல்லவர் காலம்
4.சோழர் காலம்
5.விஜயநகர நாயக்கர் காலம்
6.ஐரோப்பியர் காலம்
7.தற்காலம்
1.சங்ககாலம்
கி.மு. 2 நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதி சங்க இலக்கிய காலமாகும். இக்காலத்தினை தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என முற்சங்கங்கள் அமைத்து சங்க இலக்கியப் பாடல்கள் தனித்தனிப் பாடல்களாக பாடப்பட்டன.
அவை பல்வேறு இடங்களில் வாழ்ந்த பல்வேறு புலவர்களால் பாடப்பட்டது, பின் வந்தவர் இவற்றைத் தொகுத்து எட்டுத் தொகை, பத்துப்பாட்டு என வகைப்படுத்தினர். அவையாவன,
பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள்
1.எட்டுத்தொகை நூல்கள்
2.நற்றிணை
3.குறுந்தொகை
4.பதிற்றுப்பத்து
5.ஐங்குறுநூறு
6.பரிபாடல்
7.கலித்தொகை
8.அகநானூறு
9.புறநானூறு.
பத்துப்பாட்டு நூல்கள்
1.திருமுருகாற்றுப்படை
2.பொருநராற்றுப்படை
3.சிறுபாணாற்றுப்படை
4.பெரும்பாணாற்றுப்படை
5.முல்லைப்பாட்டு
6.மதுரைக்காஞ்சி
7.நெடுநல்வாடை
8.குறிஞ்சிப்பாட்டு
9.பட்டினப்பாலை
10.மலைபடுகடாம்
2.சங்கமருவிய காலம்
கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் களப்பிரர் தமிழகத்தை ஆட்கொண்டமையால், அக்காலத்தில் சங்க இலக்கியம் போன்று அகம், புறம் சார்ந்த இலக்கியங்கள் வளர்ச்சிப் பெறாமல் அறம் சார்ந்த நூல்களும் அதிகம் தோற்றம் பெற்றன. சங்கமருவிய காலத்தில் தோற்றம் பெற்ற நூல்கள் பின்வருமாறு அமைந்துள்ளது.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
1.நாலடியார்
2.நான்மணிக்கடிகை
3.திருக்குறள்
4.இன்னா நாற்பது
5.இனியவை நாற்பது
6.திரிகடுகம்
7.ஆசாரக்கோவை
8.பழமொழி நானூறு
9.சிறுபஞ்சமூலம்
10.முதுமொழிக்காஞ்சி
11.ஏலாதி
12.ஐந்திணை எழுபது
13.ஐந்திணை ஐம்பது
14.திணைமொழி ஐம்பது
15.திணைமொழி நூற்றைம்பது
16.கார் நாற்பது
17.களவழி நாற்பது
18.கைந்நிலை
19.பக்தி இலக்கியம்
20.அற்புதத் திருவந்தாதி
21.திருவிரட்டை மணிமாலை
22.திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்
23.முதலாழ்வார் பாசுரங்கள்
24.சமயம் சார்பான இலக்கியங்கள்
25.சிலப்பதிகாரம்
26.மணிமேகலை
இலக்கண நூல்கள்
தொல்காப்பியம்
3.பல்லவர் காலம்
கி.பி 6ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி 9ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதி பல்லவர் காலம் ஆகும். இக்காலம் பக்தி இலக்கிய காலம் எனவும் அழைக்கப்படுகிறது. பல்லவர் காலத்தில் சைவ சமயம், வைணவ சமயம் என்பன வீழ்ச்சி போக்கில் காணப்பட்டது. அவற்றை வளர்ப்பதற்காக ஆழ்வார்களும் நாயன்மார்களும் அதிகப்படியான சமயம் சார்ந்த நூல்களை பாடியுள்ளனர்.
பக்தி சார்ந்த இலக்கியங்கள்
1.நாயன்மார்கள் திருமுறைகள்
2.நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
3.திருவாசகம்
4.திருச்சிற்றம்பலக் கோவையார்
5.திருக்கைலாய ஞான உலா
6.பொன் வண்ணத்தந்தாதி
பக்திசார இலக்கியங்கள்
1.பாரத வெண்பா
2.நந்திக் கலம்பகம்
3.முத்தொள்ளாயிரம்
4.பாண்டிக்கோவை
5.கொங்கு வேளிர் பெருங்கதை/ உதயணன் கதை
6.இலக்கண நூல்கள்
7.புறப்பொருள் வெண்பா மாலை
8.இறையனார் களவியல் உரை
4.சோழர் காலம்
கி.பி 9 நூற்றாண்டு முதல் 13 நூற்றாண்டுவரை சோழர்கள் தமிழகத்தை ஆண்டனர். அவர்கள் காலத்தில் கலையும், இலக்கியமும் புத்தொளி பெற்றன. பெளத்த, சமண, வைணவ, சைவ சமயங்களும், சமய நூல்களும் இக்காலத்தில் வளர்ந்தன.
பெருங்காப்பியம் (பேரிலக்கியம்)
1.சீவக சிந்தாமணி
2.வளையாபதி
3.குண்டலகேசி
சிறுகாப்பியம் (பேரிலக்கியம்)
1.நீலகேசி
2.யசோதர காவியம்
3.சூளாமணி
4.நாககுமார காவியம்
5.உதயணகுமார காவியம்
புராண இதிகாச காப்பியம்
1.பெரிய புராணம்
2.கந்த புராணம்
3.இராமாயணம்
சிற்றிலக்கியம்
1.கலிங்கத்துப் பரணி
2.மூவர் உலா
3.குலோத்துங்க சோழன் உலா
4.நளவெண்பா
5.ஏர் எழுபது
6.சரஸ்வதி அந்தாதி
சமய தத்துவ நூல்கள்
1.திருவுந்தியார்
2.திருகளிற்றுப் படியார்
3.சிவஞானபோதம்
4.சிவஞான சித்தியார்
5.இருபா இருஃபது
6.உண்மை நெறி விளக்கம்
7.சிவப்பிரகாசம்
8.வினாவெண்பா
9.போற்றி பஃறொடை
10.கொடிக்கவி
11.நெஞ்சுவிடு தூது
12.திருவருட் பயன்
13.உண்மை விளக்கம்
14.சங்கற்ப நிராகரணம்
இலக்கண நூல்கள்
1.நன்னூல்
2.நேபிநாதம்
3.வீர சோழியம்
உரை நூல்கள்
1.இளம் பூரணர்
2..பேராசிரியர்
3.சேவைவரையார்
5.விஜயநகர நாயக்கர் காலம்
கி.பி 14 தொடக்கம் கி.பி 17 நூற்றாண்டு வரையான காலப்பகுதி விஜயநகர நாயக்கர் காலம் ஆகும். இக்காலத்தில் புலவர்கள் ஆதரிக்கப்படாமையினாலும், அரசியல், பொருளாதாரம் தன்மை அற்ற நிலையில் வறண்ட காலம் என அழைக்கப்படுகிறது.
தமிழர்களின் ஆட்சி இல்லாமல் போய் அன்னியரின் ஆட்சிக் காலங்களில் பெரிதும் நிலவியது.
புராணங்கள்
1.திருவிளையாடற் புராணம்
2.கூர்ம புராணம்
3.காசி புராணம்
4.சேது புராணம்
5.திருப்பரங்க புராணம்
காவியங்கள்
1.வில்லிபாரதம்
2.பிரபுலிங்க லீலை
3.நைடதம்
4.சில்லிலக்கியங்கள்
உலா
1.திருவாருலா
2.திருவானைக்கா உலா
3.ஏகாம்பரநாதர் உலா
4.மதுரை சொக்கநாதர் உலா
5.திருக்கைலாய உலா
கலம்பகம்
1.காசி கலம்பகம்
2.தில்லை கலம்பகம்
3.கச்சி கலம்பகம்
4.திருவாபத்தூர் கலம்பகம்
5.திருவரங்க கலம்பகம்
தூது
1.சிவஞானபாலய நெஞ்சுவிடு தூது
பிள்ளைத்தமிழ்
1.மீனாட்சி அம்மன் பிள்ளைத்தமிழ்
2.முத்துகுமார பிள்ளைத்தமிழ்
பரணி
1.மேகவதை பரணி
2.அஞ்ஞைவதை பரணி
3.பாசைவதை பரணி
நாண்மணிமாலை
1.நால்வர் நாண்மணிமாலை
2.திருவாரூர் நாண்மணிமாலை
மும்மணிக்கோவை
1.பண்டார மும்மணிக்கோவை
2.சிதம்பர மும்மணிக்கோவை
3.நம்பெருமாள் மும்மணிக்கோவை
இலக்கண நூல்கள்
1.மாரகாபொருள் மாரணலங்காரம்
2.சிதம்பர பட்டியல்
3.இலக்கண விளக்கம்
பிற நூல்கள்
1.தனிப்பாடல்
2.முக்கூடற் பள்ளு
3.திருக்குற்றாள குறவஞ்சி
4.நொண்டி நாடகம்
5.உரை நூல்கள்
6.திருப்புகழ்
7.கந்தரலங்காரம்
8.கந்தரனுபூதி
9.வேல் விருத்தம்
10.மயில் விருத்தம்
11.திருவகுப்பு
12.நீதி விளக்கம்
13.சகலகலாவல்லி மாலை
14.அட்டபிரபந்தம்
6.ஐரோப்பியர் காலம்
ஐரோப்பியர் வருகைக்குப் பின் இலக்கியங்கள் உரை நடையில் வெளிவரத் தொடங்கின, நாவல் சிறுகதை முதலாய புதிய இலக்கிய வகைகளைத் தமிழகத்திற்கு அவர்கள் அறிமுகப்படுத்தினர். அகராதிகளைத் தொகுத்தனர். இதனையொட்டிப் பிறரும் உரைநடையில் எழுதத் தொடங்கினர், உரைநடை வளர்ச்சி பெற்றது.
இலக்கண நூல்கள்
1.யாப்பிலக்கணம்
2.வினாவிடை அணி இலக்கணம்
3.இலக்கணச் சுருக்கம்
4.இலக்கண வினா விடை
5.நன்னூல் உரை
6.நாடகவியல்
7.திராவிட மொழிகள் ஒப்பிலக்கணம்
நாடக களஞ்சியங்கள்
1.நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
2.நீலகண்ட நாயனார் கீர்த்தனை
3.சகுந்தலா விலாசம்
4.வீரணிய வாசகப்பா
5.ரூபவதி, கலாவதி
6.மானவிஜயம்
7.மனோன்மணியம்
இஸ்லாம் சமயம் சார்ந்த நூல்கள்
1.மஸ்தான் பாடல்கள்
2..நாகை அந்தாதி
3.திருமணி மாலை
4.இராஜநாயகம்
5.தீன் விளக்கம்
கிறித்தவ சமயம் சார்ந்த நூல்கள்
1.இரட்சணிய யாத்திரிகம்
2.இரட்சணிய மனோகரம்
3.இரட்சணிய நிர்ணயம்
4.கிஸ்சேரி அம்மானை
5.ஞான கும்மி
6.பெத்லகேம் குறவஞ்சி
7.அடைக்கல நாயகி வெண்பா
சைவசமயம் சார்ந்த நூல்கள்
1.அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்
2.காஞ்சிபுராணம்
3.அரபளிஸ்வரர் சதகம்
4.கல்வளை அந்தாதி
5.முறைமை அந்தாதி
6.திருவருட்பா
7.சேக்கிழார் பிள்ளைத்தமிழ்
7.தற்காலம்
கி.பி 19 ஆம் நூற்றாண்டு தொடக்கம் இன்று வரையான காலப்பகுதி தற்காலம் என அழைக்கப்படுகிறது.
19 நூற்றாண்டில் வாழ்ந்த பாரதியார், பாரதிதாசன், கவிமணி போன்றோர் பல்வேறு இசைப்பாடல்கள், கவிதைகள் என்பவற்றை தமிழ்மொழியில் இயற்றி நூல்கள் மாத்திரமல்லாமல் பத்திரிகைகளிலும் பிரசுரமாக்கினர்.
அத்துடன் 20 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் கண்ணதாசன், பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம், கொத்தமங்கலம் சுப்பு, பாபநாசம் சிவன், குயிலன், வாலி, சுரதா, புலமைப்பித்தன், கங்கை அமரன், காமராசன், வைரமுத்து முதலியவர்களின் தமிழ்மொழி இலக்கியப் பாடல்கள் திரையரங்கில் ஒலித்து மக்கள் உள்ளத்தைக் கவர்கின்றன.
பல்வேறு நாவல்கள், தொடர்கதைகள், உரை நூல்கள், கவிதைகள் என்பனவும் தற்காலப் புதுப்புது தமிழ் புலவர்களால் படைக்கப்படுகிறது. 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட சில இலக்கியங்கள் சில கீழே காணப்படுகின்றது.
சிறுகதைகள்
1.சாரதையின் தந்திரம்
2.வீணை பவானி
3.ஒற்றை ரோஜா
4.கணையாழி கனவு
5.அமரவாழ்வு
6.சாபவிமோசனம்
7.அகல்யை
நாவல்கள்
1.கமலாம்பாள் சரித்திரம்
2.மகன காந்தி ரத்தினபுரி ரகசியம்
3.மேனகா
4.கும்பகோணம் வக்கீல்
5.சண்பக விஜயம்
6.முருகன் ஓர் உழவன்
நாடகம்
1.பவளக்கொடி
2.சத்தியவான் சாவித்திரி
3.வள்ளி திருமணம்
4.சதி சுலோசனா
5.கவியின் கனவு
6.மந்திரி குமாரி
7.தூக்கு மேடை
8.காகிதப்பூ
போன்ற பல நாடகங்களும் தோற்றம் பெற்றன. இவற்றை விட அதிகமான இலக்கியங்கள் தோற்றம் பெற்றுள்ளன.
kidhours – Tamil Literature History , Tamil Literature History update , Tamil Literature History essay , Tamil Literature History notes , Tamil Literature History short essay
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.