ஆஸ்திரேலியாவில் வெள்ள பாதிப்பை தொடர்ந்து விஷமுள்ள எட்டுக்காலிகள் பொதுமக்களின் வீடுகளுக்கு படையெடுக்கலாம் என ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கனமழை பெய்து கடந்த ஐம்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மழை மற்றும் வெள்ளம் காரணமாக கொடிய விஷமுள்ள எட்டுக்காலிகள் பொதுமக்களின் வீடுகளுக்குள் படையெடுக்கலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அப்பகுதியில் இருக்கும் எட்டுக்காலிகள் உலகிலேயே அதிக விஷமுள்ள இனத்தை சேர்ந்தவை ஆகும்.
எனவே, வெள்ளம் காரணமாக எட்டுக்காலிகள் பிளேக் போல பரவ வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடும் மழை வெள்ளத்தால் வடமேற்கு சிட்னி இன்னும் தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது.
இரண்டு தினங்களுக்கு பின் இன்றுதான் சூரிய வெளிச்சத்தையே சிட்னி மக்கள் கண்டனர். உடனடியாக விஷ எட்டுக்காலிகள் படையெடுக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்திருப்பது மக்களிடையே மீண்டும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.இந்த விஷமுள்ள எட்டுக்காலிகள் கடித்து ஏற்கெனவே சிலர் இறந்திருப்பதும் சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளநீர் நிறைந்த பகுதிகளில் இருந்து ஆயிரக்கனக்கான எட்டுக்காலிகள் புறப்பட்டு செல்லும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.