Thirukkural 68 தினம் ஒரு திருக்குறள்..
அறத்துப்பால் / இல்லறவியல் / மக்கட்பேறு
”தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது….”
![தம்மின்தம் மக்கள் அறிவுடைமை.... தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 68 1 Thirukkural 68 தினம் ஒரு திருக்குறள்..](https://www.kidhours.com/wp-content/uploads/2022/10/thinam-oru-kural-kidhours-4-1-1.jpg)
தம்மைக் காட்டினும், தம் மக்கள் அறிவுடையவராக விளக்கம் பெறுதல், பெற்றோருக்கு மட்டுமல்லாமல், பெரிய உலகிலுள்ள உயிர்களுக்கெல்லாம் இனிமையானது ஆகும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)
தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.
—மு. வரதராசன்
தம் பிள்ளைகள் அறிவு மிக்கவராக இருப்பது, தம்மைக் காட்டிலும், இப்பெரிய பூமியில் அழியாமல் தொடரும் உயிர்களுக்கு எல்லாம் இனிது.
—சாலமன் பாப்பையா
பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்
—மு. கருணாநிதி
Kidhours – Thirukkural 68
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.