Tamil Latest School Children News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
இலங்கையை போல், நேபாளத்திலும் அந்நிய செலாவணி கையிருப்பு கடந்தாண்டு ஜூலை முதல் இறக்குமதி உயர்வால் குறையத் தொடங்கி உள்ளது.
சுற்றுலா மற்றும் ஏற்றுமதி துறைகள் மூலம் ஈட்டப்படும் வருவாயும் குறையத் தொடங்கியது.
கடந்தாண்டு ஜூலையில் ரூ.87,537 கோடியாக இருந்த இந்த நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு, இந்தாண்டு பிப்ரவரியில் ரூ.72,537 கோடியாக, 17 சதவீதம் குறைந்துள்ளது.
இது போக போக மேலும் குறையும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேபாள மத்திய வங்கியின் இறக்குமதிக்கான அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்தபட்சம் 7 மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அது தற்போது 6.7 மாதங்களாக குறைந்துள்ளது.
இதனால், அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறை ஏற்பட்டு, இலங்கையை போல் கடும் நிதி, பொருளாதார நெருக்கடியில் சிக்கும் சூழ்நிலை நேபாள நாட்டிற்கும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அத்தியாவசியமற்ற விலை உயர்ந்த ஆடம்பர பொருட்களை இறக்குமதி செய்ய நேபாள் மத்திய வங்கி தடை விதித்து உள்ளது.
kidhours – Tamil Latest School Children News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.