Tamil Latest Music Kids சிறுவர்களுக்கான உலக செய்திகள்
தாவரங்களுடன் நாம் பேசியிருப்போம். அதற்கு தாவரங்கள் என்றும் பதில் சொல்லுவதில்லை. நாம் வாழும் இந்த 2021 காலகட்டத்தில் எல்லா டெக்னாலஜியும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு பக்கம் 5ஜி,ரோபோ என்று வளர்ந்து கொண்டு இருக்க இன்னொரு பக்கம் தாவரங்கள் நமக்கு பதில் என்ன ? அது உங்களுக்கு பேசுவது என்ன ? பாடியே காட்டும் என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
பிளாண்ட்வேவ் என்பதுதான் அந்த கருவியின் பெயர். இதன் விலை டாலரில் $ 299 ஆகும். நம் இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 22,200 வரும். இந்த சாதனத்தை மொபைலுடன் இணைத்தும் தாவரங்களின் இசையை கேட்கலாம். இந்த கருவி மூலம் செடிகள்,மரங்கள், பூக்கள், போன்சாய் முதல் காளான்கள் வரை ஆகிய தாவரங்களின் உருவாக்கும் ஒலிகளைக் கேட்கலாம்.
இலைகளில் இக்கருவின் இரண்டு மின்முனைகளை வைப்பதன் மூலம் தாவரங்களில் உள்ள மின் மாறுபாடுகளைக் கண்டறிய முடியும் என்று பிளான்ட்வேவ் (Plantwave) இணையதளம் கூறுகிறது. செடிகளில் தோன்றும் மாறுபாடுகள் அலைகளாகப் பிடிக்கப்பட்டு, அவை இசையாக மாற்றப்படுகின்றன.ஒலி குணங்களின் வேறுபாடுகளுக்கு அலை பண்புகள் காரணமாகும்.
பிளான்ட்வேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இக்கருவி எவ்வாறு தாவர இசையை தருகிறது ? என்பது பற்றி பல வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். உதாரணமாக கற்றாழை, பூக்கள் மற்றும் கடலோர செடிகள் மூலம் இசை எவ்வாறு வருகிறது என்பதை காட்டியிருக்கிறார்கள். எந்த வகை செடியோ அல்லது மரங்களோ அல்லது கொடியோ எதுவாக இருந்தாலும் அவற்றின் இசையை கேட்கலாம் என்பதில் இருந்தே தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை காணலாம்.
செடிகளில் அல்லது மரங்களில் உள்ள இறந்த இலைகள் இசை ஒலியை உருவாக்காது. ஆரோக்கியமான இலைகள் மட்டுமே இசையை உருவாகும். இந்த கருவி MIDI சிந்த்ஸ் மற்றும் டிஜிட்டல் ஆடியோ முறையில் செயல்படும் என்று அறிவித்துள்ளனர். இயற்கையுடன் நேரம் செலவழிப்பது,கவனம் செலுத்துவது போன்றவை செய்யும் போது இக்கருவி அதனை முழுமையாக்கும்.
இதை வீட்டில், சமையலறையில், பிட்னெஸ் ஸ்டுடியோவில், யோகா அல்லது தியானத்தின் போது அல்லது நடைபயிற்சியின் போதோ இக்கருவியை பயன்படுத்தலாம் என்று கூறுகின்றனர்.இயற்கையின் மீது ஆர்வம் கொண்டிருப்பவர்களுக்கு இந்த கருவி ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இனிமே எங்கு சென்றாலும் அங்கு இருக்கும் செடியின் இசையை நாம் அனைவரும் கேட்டு மகிழலாம். இக்கருவி புழக்கத்தில் வர இன்னும் காலம் ஆகும் என்று கூறுகிறார்கள். எதிர்காலத்தில் தாவர இசையும் மாறினால் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை.
kidhpurs – Tamil Latest Music Kids,Tamil Latest Music Kids News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.