Tamil Latest Kids News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அமெரிக்காவின், சிகாகோவில் இருந்து சியாட்டில் நோக்கி, 8 பெட்டிகளுடன் சென்று கொண்டிருந்த ரயில், அந்நாட்டு நேரப்படி நேற்று மாலை 4 மணியளவில் வடக்கு மோன்டானா பகுதியில் தடம் புரண்டது. ரயிலில் 141 பயணிகள் மற்றும் 16 பணியாளர்கள் இருந்தனர்.இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.
![தடம் புரண்ட ரயில் 3 பேர் பலி Tamil Latest Kids News 1 Tamil Latest Kids News](https://www.kidhours.com/wp-content/uploads/2021/09/train-accident-us.jpg)
காயம் அடைந்தவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எத்தனை பேர் காயம் அடைந்தனர் என்ற தகவலை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
ரயில் தடம் புரண்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதில், தண்டவாளம் அருகே மக்கள் காத்துக் கொண்டிருப்பது போலவும், அவர்களுக்கு அருகே மூட்டைகள் சிதறி கிடக்கும் காட்சிகள் உள்ளன. மேலும், ரயில் பெட்டிக்கு மேல் மற்றொரு ரயில் பெட்டிகள் கிடக்கும் காட்சிகளும் பதிவாகியது.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.