Tamil Latest Kids News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
விண்வெளிக்கு மனிதனை அனுப்புவது தொடர்பாக விஞ்ஞானிகள் பலகட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வரும் அதே நேரத்தில், விண்வெளியை ராட்சத பலூன் வடிவ கேபின் மூலம் சுற்றிக்காட்ட உள்ளதாக ஒரு நிறுவனம் அறிவித்துள்ளது. விண்வெளி சுற்றுலா என்ற சந்தையில் அடியெடுத்து வைத்துள்ளது ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் என்ற நிறுவனம், இந்நிறுவனம் கடந்த செவ்வாய் கிழமையன்று தனது ஸ்பேஸ் கேபின்களின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

இந்த கேபின்களில் உள்ள சொகுசு மற்றும் பாதுகாப்பான அறையில் அமர்ந்தபடி, பூமியின் மேற்பரப்பை காணலாம் என தனது வாடிக்கையாளர்களுக்கு உறுதி அளித்துள்ளது. இந்த சேவை புளோரிடாவில் உள்ள கென்னடி ஸ்பேஸ் சென்டரில் இருந்து 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 600க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன, ஒவ்வொன்றும் 125,000 அமெரிக்க டாலர்கள் ஆகும்.
kidhours – Tamil Latest Kids News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.