Tamil Latest Kids News Sivan Kovil சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அண்டை நாடான பங்களாதேஷ இஸ்லாமிய நாடாக உள்ள நிலையில், பாகிஸ்தானைப் போல இங்கும் இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இருப்பினும், இங்குள்ள பழங்கால சிவன் கோவிலுக்கு வந்து தரிசிக்க தொலைதூரத்திலிருந்தும் மக்கள் வருகிறார்கள். இந்த பழங்கால கோவிலின் அதிசய அக்னி குண்டம் தான் இதற்கு காரணம், இங்கு சுடர் எப்போதும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. இது விஞ்ஞானிகளை கூட ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது.

பங்களாதேஷ் இந்து அமைப்பு இது குறித்து கூறுகையில், இந்த கோவிலில் இருக்கும் அக்னி குண்டத்தில் தீ அணையாமல் எரிந்து கொண்டிருக்கும் என்றும் அந்த சுடர் எங்கிருந்து வருகிறது என இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் கூறியுள்ளது.
பங்களாதேஷ் இந்து கவுன்சில் செவ்வாய்க்கிழமை இந்த அதிசய சிவாலயத்தின் சில படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டது. ‘ மகாதேவன் அக்னி குண்டம்’ பற்றிய தகவலை அளித்த இந்த கவுன்சில் ‘அக்னிகுண்டன் உள்ள இந்த சிவனின் பழமையான கோவில் சிட்டகாங்கில் அமைந்துள்ளது என கூறியுள்ளது.
kidhours – Tamil Latest Kids News Sivan Kovil
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.