Tamil Latest Kids News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உக்ரைன் மீது ரஷியா இன்று போர் தொடுத்துள்ள நிலையில் , தரைவழி, வான்வெளி மூலம் உக்ரைன் தலைநகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் ரஷிய பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த தாக்குதலால் இருதரப்பிலும் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் மீது ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. தலைநகர் கிவ்வில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது.
மேலும் உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத்துறை தலைமையகத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
kidhours – Tamil Latest Kids News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.