Tamil Latest Kids News – சிறுவர்களுக்கான உலக செய்திகள்
வீட்டில் வளர்த்து வரும் செல்லப்பிராணி இறந்துவிட்டால் அதன் இறுதி சடங்கிற்காக அரசு ஊழியர்களுக்கு 2 நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் அதனை குடும்பத்தில் ஒருவராக தான் நடத்துவது உண்டு. நாய், பூனை, முயல் உள்ளிட்ட பல வகையான செல்லப்பிராணிகளை பாசமாக வளர்த்து வருகின்றனர். அதற்கு சரியான நேரங்களுக்கு அவற்றிற்கென தனி உணவு கொடுப்பது, மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லுவது என பராமரிப்புகளையும் பார்த்து பார்த்து செய்வது வழக்கம். அந்த வகையில் அலுவலக ஊழியர்களின் செல்லப்பிராணிகள் இறந்துவிட்டால் அதன் இறுதி சடங்கிற்காக ஊழியர்களுக்கு 2 நாள் வரை விடுமுறை அளிக்க கொலம்பியா அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில், ஒரு வீட்டின் செல்லப்பிராணி இறந்தால், அதன் ஊழியர்களுக்கு இரண்டு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பைப் பெற அனுமதிக்க வேண்டும் என்றதொரு புதிய சட்டத்தை கொலம்பிய அரசியல்வாதி ஒருவர் அரசுக்கு முன்வைத்தார். அதாவது கொலம்பியாவின் லிபரல் கட்சியை சேர்ந்த அலெஜான்ட்ரோ கார்லோஸ் சாகான் என்பவர் விடுப்பு தொடர்புடைய மசோதாவை நாடாளுமன்றத்தில் கோரிக்கையாக வைத்துள்ளார். நாட்டில் உள்ள பெரும்பாலான குடும்பங்களில் செல்லப்பிராணிகள் ஒரு முக்கிய பாகமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை கவனத்தில் எடுத்துக் கொண்ட கொலம்பியா அரசு, ஊழியர்களது செல்லப்பிராணிகள் இறந்துவிட்டால் அதன் இறுதி சடங்கிற்காக 2 நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய சட்டம் விலங்குகளின் நலனை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தை இல்லாத சிலர், செல்லப்பிராணிகளை குழந்தைகளாக நினைத்து பாவித்து வருவதால் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.