Sunday, January 19, 2025
Homeசிறுவர் செய்திகள்நாட்டில் வெப்பத்தை சமாளிக்க போலி மழை Tamil Latest Kids News Fake Rain Tamil

நாட்டில் வெப்பத்தை சமாளிக்க போலி மழை Tamil Latest Kids News Fake Rain Tamil

- Advertisement -

Tamil Latest Kids News சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

துபாயில் மழை பெய்தது… இது சாதாரணமான விஷயம் தானே? இதில் என்ன இருக்கிறது என்ற கேளி எழுகிறதா? இது தானாக வந்த மழையில்லை, உருவாக்கப்பட்ட போலி மழை… இந்த போலி மழையின் வீடியோவை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தேசிய வானிலை ஆய்வு மையம் பகிர்ந்துள்ளது.

துபாயில் கோடைகாலம் மிகவும் கடுமையாக இருக்கும். ஒரு கட்டத்தில் அங்கு வெப்பநிலை 50C ஐ தாண்டியது. வெப்பத்தைத் தணிக்க, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய வானிலை மையம் எடுத்த முடிவு தான் போலி மழை. போலி மழை ஏற்படுத்திய நீர் துபாயின் தெருக்களிலும், சந்துகளிலும், வீதிகளிலும் ஆறாய் பாயந்தது, வெப்பத்தைக் குறைத்தது.

- Advertisement -
Tamil Latest Kids News
Tamil Latest Kids News

மேக விதைப்பு எனப்படும் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த மழை உருவாக்கப்பட்டதாக டெய்லி மெயில் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. புதுமையான தொழில்நுட்பம் மேகங்களில் மின்சார அதிர்ச்சியை ஏற்படுத்தி அதன் மூலம் மழையை வரவைக்கிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய வானிலை மையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலும் மழை பெய்யும் வீடியோ பகிரப்பட்டது. கார்கள் அணிவகுத்துச் செல்லும் வீதிகளில் மழை பொழிவதை அந்த வீடியோ காட்டுகிறது
மழை பொய்க்கும் சமயங்களில் மேக விதைப்பு (Cloud seeding) முறையில் செயற்கையாக மழையை உருவாக்குவதுதான் செயற்கை மழையாகும்.

- Advertisement -

பூமியில் இருக்கும் நீர் ஆவியாகி மேலே நோக்கிச் செல்லும் போது குளிர்ந்து மேகமாக மாறுகிறது.குறிப்பிட்ட பருவ காலங்களில் ஏற்படும் குளிர்ந்த காற்றின் மூலம் மேகங்களில் உள்ள நீர் மூலக்கூறுகள், நீர்த்திவலைகளாக மாறி மழை பொழிகிறது. இந்த நீர்க்கூறுகள் அதிக குளிர்ச்சியடைந்தால், மேகத்தில் உள்ள ஈரப்பதம் நீராக மாறாது. அப்போது மேகங்கள் இருந்தும் மழை பெய்யாமல் சென்றுவிடும்.

Tamil Latest Kids News
Tamil Latest Kids News

அப்போது, சிறிய விமானம் அல்லது ட்ரோன்கள் மூலம் பொட்டாசியம் அயோடைடு, சில்வர் அயோடைடு, கார்பன் டை ஆக்சைடு போன்றாவை மேகங்களின் மீது தூவப்படும். இவை ஈரப்பதத்தைச் சரி செய்து மழையைத் தருவிக்கும்.

40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த முறையை பயன்படுத்தி செயற்கையாக மழை பெய்விக்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் வீதிகளில் இந்தத் தொழில்நுட்பம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவிலும் மழை பொய்க்கும் காலத்தில் விவசாயத்திற்காக செயற்கை மழை பெய்விக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 

kidhours – Tamil Latest Kids

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.