Tamil Latest Kids News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சீனாவில் பெரும்பாலான பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால், பயிர்களைக் காக்க செயற்கை மழையை உருவாக்கி மேக விதைப்பு முறையைக் கையாள சீன அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
சிச்சுவான் மாகாணத்தில் 45 டிகிரி செல்சியஸை வெப்பநிலை கடந்ததால், வீடுகளில் குளிர்சாதன இயந்திரங்களின் தேவை அதிகரித்து, மின்சாரத்தை சேமிப்பதற்காக தொழிற்சாலைகள் கடந்த வாரம் மூடப்பட்டன.
சீனாவின் ஆண்டு மொத்த உற்பத்தியில் இலையுதிர் கால அறுவடை 75 சதவீதம் பங்கு வகிப்பதால், எவ்வித சேதமும் ஏற்படாதவாறு அறுவடையை உறுதிப்படுத்த அதிகாரிகள் அவசர நடவடிக்கைகளைக் கையாண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மேகத்தில் ரசாயனத்தை தூவி, செயற்கை மழையை உருவாக்கும் மேக விதைப்புத் திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
kidhours – Tamil Latest Kids News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.