Tamil Latest Kids News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க மூக்கு வழியாக செலுத்தும் ஸ்பிரே மருந்தை உருவாக்கியுள்ள இங்கிலாந்தின் போக்ஸ்பயோ நிறுவனம், அம்மருந்தை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
போக்ஸ்பயோ என்ற இங்கிலாந்து நிறுவனம், கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுப்பதற்காக மூக்கு வழியாக செலுத்துகிற ஸ்பிரே தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பு மருந்து கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுப்பதில் 63 சதவீதம் பயனுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்தை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு அந்த நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.
இதற்கான அனுமதியைப் பெற, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் அது விண்ணப்பிக்க உள்ளதாக அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த தடுப்பு மருந்தை இந்திய நிறுவனமே தயாரித்து, இங்கு மலிவு விலையில் கிடைக்கச் செய்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என போக்ஸ்பயோ நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பு மருந்தை அதிகபட்ச ஆபத்தைக் கொண்டுள்ள 648 சுகாதார பணியாளர்களைக் கொண்டு சோதித்துப் பார்த்ததில் இது கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை தடுப்பதில் 63 சதவீதம் செயல்திறனைக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த தடுப்பு மருந்தை இரு நாசிகளிலும் தலா 2 ஸ்பிரேயை ஒருவர் தானாகவே செலுத்திக்கொள்ள முடியும். இது 6 முதல் 8 மணி நேரம் பாதுகாப்பைத்தரும் என சொல்லப்படுகிறது.
இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ராகேஷ் உப்பல் கூறுகையில், தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியமானது என்றபோதும், அது 100 சதவீதம் பயன் அளிப்பதில்லை. தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் கொரோனா பாதிப்பு அபாயம் உள்ளது.
kidhours – Tamil Latest Kids News ,Tamil latest kids news covid19 spray vaccine
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.