Tamil Latest Kids News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சீனாவில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலியானார்கள். சீனாவின் லியு பன்ஷுய் நகரில் ஜாங்கே ஆற்றில் நேற்று பயணிகளுடன் சென்ற படகு ஒன்று திடீரென கவிழ்ந்தது.
தகவல் அறிந்து 50 படகுகளில் விரைந்த 17 மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இன்று காலை வரை 40 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேர் பலியானார்கள்.

மேலும் 5 பேர் மாயமாகியுள்ளனர். மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விபத்துக்குள்ளான படகில் பெரும்பாலனோர் மாணவர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. விபத்து குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.