Tamil Latest Kids News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
தென்கிழக்கு அவுஸ்ரேலியாவில் 5.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மெல்போர்ன் நகரில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

விக்டோரியா மாநிலத் தலைநகருக்கு சற்று தொலைவில், உள்ளூர் நேரப்படி 09:15 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நிலநடுக்கம் காரணமாக பலத்த சேதங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை என்பது மிகவும் நல்ல செய்தி என பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த நிலநடுக்கம் அண்டை நாடான தெற்கு அவுஸ்ரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலும் உணரப்பட்டது. அதைத் தொடர்ந்து 4.0 மற்றும் 3.1 ரிக்டர் அளவிலான இரண்டு நில அதிர்வு ஏற்பட்டதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் சமீபத்திய ஆண்டுகளில் அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நிலநடுக்கங்கள் ஒன்றாக இது இருந்தாலும், குறிப்பிடத்தக்க சேதத்தை இது ஏற்படுத்தியதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.