tamil-latest-kids-news சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அஷ்ரப் கனி, தனது குடும்பத்தினருடன் வெளிநாடு தப்பிச் சென்றார். 4 கார்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் பணத்தை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. ஆப்கனில் இருந்து புறப்பட்ட அஷ்ரப் கானி, சமூக வளைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மக்கள் ரத்தம் சிந்துவதை தவிர்க்கவே நாட்டைவிட்டு வெளியேறியதாக குறிப்பிட்டார். இனி நாட்டின் மரியாதைக்குக்கும், பாதுகாப்புக்கும் தலிபான்களே பொறுப்பாவார்கள் எனவும் தெரிவித்திருந்தார்.
ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேறிய அஷ்ரப் கனியை ஏற்க தஜிகிஸ்தான் அரசு மறுத்துவிட்டது. இதனால், ஓமன் வழியாக அமெரிக்காவுக்கு அவர் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், மனிதநேய அடிப்படையில், அஷ்ரப் கனி மற்றும் அவரது குடும்பத்தினரை வரவேற்றுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. எனினும், அவர் எங்கு தங்கியுள்ளார் என்பது குறித்த தகவல்களை அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிடவில்லை.
இதனிடையே ஆப்கானிஸ்தானில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக ஹக்கானி அமைப்பைச் சேர்ந்த அனஸ் ஹக்கானி தலைமையிலான குழுவினர் முன்னாள் அதிபர் அமித் கர்சாயை சந்தித்து பேசினர். ஆப்கன் அரசின் அமைதி தூதுவர் அப்துல்ல அப்துல்லா, செனட் தலைவர் ஃபசல் ஹாடி ஆகியோரும் ஆலோசனையில் பங்கேற்றனர். ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக தாலிபான் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான அப்துல் கனி பராதர் அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
kidhours – Tamil Latest Kids News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.