Tamil Latest Economy News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போரால் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை, உலக பொருளாதாரம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன் விபரம் வருமாறு,
உக்ரைன் – ரஷ்யா போரால் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, நடப்பு சர்வதேச பொருளாதார வளர்ச்சி, மறுமதிப்பீடு செய்யப்பட்டு 4 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
போர் காரணமாக உலகளவில் பணவீக்கம், கடந்த 10 ஆண்டு சராசரியை விட, இரு மடங்கு உயர்ந்து, 6.7 சதவீதமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தெற்காசிய பொருளாதார மதிப்பீடு 0.4 சதவீதம் குறைக்கப்பட்டு, 5.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய பொருளாதாரம் 2021-ம் ஆண்டில் 8.8 சதவீதம் வளர்ச்சி கண்டது.
இந்த ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 0.3 சதவீதம் குறைந்து 6.4 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்கம் அதிகரித்த போதிலும், பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடாக இந்தியா உள்ளது என தெரிவித்துள்ளது.
Tamil Latest Economy News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.