Tamil Latest Children News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஜெர்மனியில் ரெயில்வே கட்டுமான தளத்தில், 76 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டாம் உலகப்போர் குண்டு வெடித்ததால் அதில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முனிச் நகரில் டோனர்ஸ்பெர்கர் பாலத்துக்கு அருகே ரெயில்வே துறை கட்டுமான தளத்தில் கட்டுமானப்பணி நடந்து வருகிறது.
அங்கு நேற்று முன்தினம், அந்த பாலத்துக்கு கீழே, பிரதான ரெயில் நிலையத்துக்கு அருகே துளையிடுகிற பணி நடந்து வந்த வேளையில் அங்கே கிடந்த இரண்டாம் உலகப்போர் குண்டு ஒன்று பலத்த சத்தத்துடன் வெடித்ததுள்ளது. குறித்த குண்டுவெடிப்பில் சிக்கி 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் அந்தப் பகுதியில் புகை மூட்டம் ஏற்பட்டது. ஒரு எந்திரம் வெடிப்பின்போது கவிழ்ந்தது.
தகவலறிந்து மீட்பு படையினர் படுகாயம் அடைந்த 4 பேரும் மீட்டு சிகிச்சைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இந்த குண்டுவெடிப்பால் அந்தப் பகுதியில் ரெயில் போக்குவரத்து பெரும் பாதிப்புக்கு ஆளானது. டச் பான் ரெயில் நிறுவனம் ரெயில் போக்குவரத்தை நிறுத்து.
இதனை தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் விரைந்து வந்து வெடிகுண்டின் எச்சங்களை ஆராய்ந்து வருகின்றனர்.
வெடித்த இரண்டாம் உலகப்போர் குண்டு எடை 250 கிலோ இருக்கும் என்று பேவேரியா மாகாணத்தின் உள்துறை மந்திரி ஜோக்சிம் ஹெர்மான் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்தாகும்.
kidhours – Tamil Latest Children News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.