Different Processing of USA Company சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் அமைந்துள்ள Alcor Life Extension Foundation எனும் என்ஜிஓ நிறுவனமானது 199 மனிதர்களின் உடல்கள் பதப்படுத்தி வைத்துள்ளது.
குறித்த மனித உடல்கள் திரவ நைட்ரஜனால் நிரப்பப்பட்ட தொட்டிகளுக்குள் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பதப்படுத்தப்பட்ட உடல்களின் உரிமையாளர்கள், எதிர்காலத்தில் விஞ்ஞானம் இன்றைய திறனைத் தாண்டி முன்னேறியிருக்கும் போது
புத்துயிர் பெறுவார்கள் என்ற நம்பிக்கையில் கிரையோபிசர்வ் (cryopreserve) என்ற இந்த முறையை தெரிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
Cryopreservation என்பது திரவ நைட்ரோஜன் (Liquid Nitrogen) நிரப்பப்பட்ட தொட்டிகளில் மனித உடல்களை உறையவைத்து பதப்படுத்தும் தொழில்நுட்பம் ஆகும்.
பதப்படுத்தப்பட்டுள்ள மனித உடல்களில் பெரும்பாலானவை கடுமையான புற்றுநோய் அல்லது சிகிச்சைவழி தீர்க்கமுடியாத பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் என்று Alcor Life Extension Foundation கூறுகிறது.
மேலும், உறைய வைக்கப்பட்ட உடல்களில் மிக இளவயதுடையது Matheryn Naovaratpong என்ற தாய்லாந்தைச் சேர்ந்த 2 வயது சிறுமியுடையது என தெரிவிக்கின்றனர்.
மட்டுமின்றி, இவ்வாறாக ஒரு உடலை பதப்படுத்த குறைந்தபட்ச செலவு 20,000 அமெரிக்க டொலர் என கூறுகின்றனர். மேலும், மூளையை மட்டும் உறையவைக்க 80,000 டொலர் செலவாகும் எனவும் தெரிவிக்கின்றனர்.
தற்போது இந்த அமைப்பின்கீழ் உயிருடன் இருக்கும் 1,400 பேர் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Kidhours – Different Processing of USA Company
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.