World Longest Travel Flight சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் அன்றாட வாழ்விலிருந்து சற்று விலகி ஓய்வெடுக்க பயணம் செய்வது பலருக்கும் விருப்பமான ஒன்று சிலர் நீண்ட தூரம் பயணம் செய்வதையே தங்களின் முழுநேர வாழ்க்கையாகவும் வைத்துள்ளனர். அப்படிப்பட்டவர்கள் இது நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கும்.
நீண்ட தூரம் பயணம் செய்வதற்காகவே இரண்டு நகரங்கள் உள்ளன. அதில் முதலாவது தான் நியூயார்க் – சிங்கப்பூர் விமான பயணம்.சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் இந்த விமானம் இடையில் எங்கும் நிற்காமல் சுமார் 15,345 கிலோ மீட்டர் தூரத்தை வெறும் 18 மணி நேரத்தில் கடந்துவிடுகிறது.
இதேபோல மிக நீண்ட தூர பயணம் கொண்ட 2வது விமானமும் சிங்கப்பூரில் தான் உள்ளது. நோவார்க் முதல் சிங்கப்பூர் வரை இயக்கப்படும் இந்த விமானம் சுமார் 15,345 கிலோ மீட்டர் தூரத்தை வெறும் 18 மணி நேரம் 25 நிமிடங்களில் கடந்து விடுகிறது.
மேலும் உலகின் 3வது மிக நீண்ட தூர பயணம் கொண்ட விமானம் பெர்த் – லண்டன் இடையே இயக்கப்படுகிறது.
இந்த விமானம் சுமார் 14,500 கிலோமீட்டர் தூரத்தை 17 மணி நேரம் 32 நிமிடங்களில் கடந்து விடுகிறது.
Kidhours – World Longest Travel Flight
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.