80World Egg Day in Tamil உலக முட்டைகள் தினம்
இன்று உலக முட்டை தினம் . 1996 முதல் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் வரும் இரண்டாவது வெள்ளிக்கிழமை, உலக முட்டை தினமாகக் கொண்டாப்பட்டு வருகிறது; முட்டையின் நன்மைகள் குறித்தும்,
அதிலுள்ள சத்துகள் மற்றும் அதன் முக்கியத்துவங்களை மக்களுக்குத் தெரியபடுத்துவது தான் இந்த நாளின் நோக்கம்.
தினம் ஒரு முட்டை எடுத்துக்கொள்வது உடல் நலனுக்கும் ஆரோக்கியத்துக்கும் நலம் பயக்கும்.
ஒயிட் லெகான் கோழி முட்டை மற்றும் நாட்டுகோழி முட்டை ஆகிய இரண்டிலுமே பலவிதமான ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன.
ஒரு முட்டையில் புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், மாவுசத்து, கனிமசத்துகள் அடங்கியுள்ளன. ஊட்டச்சத்து ரீதியாக பார்த்தால் இரண்டு வகை முட்டையிலும் எந்த பெரிய வித்தியாசமும் இல்லை.
லெகான் முட்டையை விட நாட்டுகோழி முட்டையில் ஒரு சதவீதம் கொழுப்பு அதிகமாக இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக அறிவியல் ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
ஆனால் அதுவும் கோழி வளரும் இடங்களை பொறுத்து வேறுபடும், எல்லா இடங்களிலும் கிடைக்கும் நாட்டுகோழி முட்டைகளிலும் கொழுப்புசத்து அதிகம் என்று சொல்லமுடியாது,” என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.