Without Airport Countries சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலகில் உள்ள சில நாடுகளில் விமானங்களை தரை இறக்குவதற்கான விமான நிலையங்கள் இல்லாமல் இருக்கின்றன.
அந்த வகையில், சுமார் 468 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்த ஐரோப்பாவின் ஆறாவது சிறிய நாடு அன்டோரா ஆகும். இது உலகின் 16 ஆவது சிறிய நாடாகும். இங்கு 85 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர்.
எனினும் இங்கு விமான நிலையம் இல்லாததால் இங்குள்ளோர் ஸ்பெயினில் உள்ள விமான நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர்.
ஐரோப்பாவுக்கும் ஆஸ்திரியாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையில் அமைந்துள்ள சிறிய நாடு லிச்சென்ஸ்டீன் ஆகும். இந் நாடு 160 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டதுடன் இங்குள்ளோர் ஜெர்மனிய மொழியைப் பேசுகிறார்கள்.
இங்கு விமான நிலையம் இல்லாத காரணத்தால் இங்குள்ளோர் சுவிட்சர்லாந்து சூரிச் விமான நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர்.
அதேவேளை, ஐரோப்பியாவில் அமைந்துள்ள சான்மரினோ நாட்டில் உள்ள மக்கள் அந்த நாட்டில் விமான நிலையம் இல்லாததால் இங்குள்ள மக்கள் இத்தாலி நாட்டில் உள்ள விமான நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர்.
மேற்கு ஐரோப்பாவில் உள்ள சிறிய நாடு மொனாகோ. இது பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளுக்கு இடையே அமைந்துள்ளது.
செல்வந்தர்கள் அதிக அளவில் வசிக்கும் நாடாக இருந்தாலும்,இந்த நாட்டில் விமான நிலையங்கள் இல்லை.
Kidhours – Without Airport Countries
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.