Wildfire Missing Person சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்திலுள்ள மாவி தீவில் காட்டுத் தீ ஏற்பட்ட பகுதிகளில் மேலும் பட்டியலில் வராத 400 பேரின் நிலை என்னவாகியது என்று தெரியவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மாவி தீவில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ள லஹைனா, புலேஹு மற்றும் மத்தியப் பகுதிகளில் காணாமல் போனவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 8இல் மாவி தீவில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது. இதில் சிக்கி 115 பேர் பலியாகியுள்ளனர். பேரழிவு தரும் காட்டுத் தீயில் முன்னதாக 388 பேரின் பெயர் பட்டியல் வெளியிட்டுள்ள நிலையில், மேலும் 400 பேரின் நிலை என்ன ஆகியது என்பது தெரியவில்லை.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஒற்றை அடுக்குமாடிகளில் 100 சதவீதம் தேடுதல் நிறைவடைந்த நிலையில், தற்போது அடுக்குமாடிக் கட்டடங்கள் மற்றும் வணிக வளாகங்களில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், 1,700களில் உருவாக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுலாத் தலமான லஹைனா நகரம் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டன. காட்டுத் தீயில் 271 கட்டுமானங்கள், 19,000 வீடுகள், கடைகள், பிற கட்டடங்கள் சேதமடைந்ததாக அதிகாரிகள் கூறினர்.
லஹைனா நகரில் இந்தியாவிலிருந்து 150 ஆண்டுகளுக்கு முன்னா் கொண்டு வந்து நடப்பட்ட பழைமை வாய்ந்த ஆலமரமும் தீயில் கருகியதாக தெரிவிக்கப்படுகின்றது.
Kidhours – Wildfire Missing Person
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.