WHO Warning to Europe சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஐரோப்பாவில் பரவலாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அங்கு மற்றொரு கொரோனா அலை உருவாகலாம் என உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பா தலைவர் ஹான்ஸ் க்ளூக்(Hans Kluk) மற்றும் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான
ஐரோப்பிய மையத்தின் இயக்குநர் ஆண்ட்ரியா அம்மோன்(Andrea Ammon) ஆகியோர் இணைந்து நேற்று கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
![ஐரோப்பாவிற்கு WHO திடீர் எச்சரிக்கை ! WHO Warning to Europe 1 WHO Warning to Europe சிறுவர்களுக்கான உலக செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2022/10/WHO-வின்-அதிரடி-எச்சரிக்கை.jpg)
அந்த கூட்டறிக்கையில், “ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த சூழ்நிலையில் நாம் தற்போது இல்லை என்றாலும், கொரோனா தொற்று நோய் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது தெளிவாகிறது.
துரதிர்ஷ்டவசமாக ஐரோப்பாவில் கொரோனா எண்ணிக்கை மீண்டும் உயர்ந்து வருகிறது. இது மற்றொரு தொற்றுநோய் அலை ஆரம்பித்துள்ளதை கூறுகிறது.
ஐரோப்பா முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kidhours – WHO Warning to Europe
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.