Tamil Kids Website சிறுவர்களுக்கான உலக செய்திகள்
மிகப்பெரிய மலைப்பாம்பை அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு பிடித்துள்ளது. இதுவரை பிடிக்கப்பட்டதிலேயே அதிக எடைக் கொண்டது எனவும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவின் புளோரிடாவில் அதிக அளவில் மலைப்பாம்புகள் உலா வருவதால் அதனை தடுப்பதற்காக வன விலங்கு உயிரியலாளர்கள் திட்டம் ஒன்றினை தீட்டியிருக்கிறார்கள்.இதன்படி, ஆண் மலைப்பாம்புகளில் ரேடியோ டிரான்ஸ்மிட்டர்களை பொருத்துவதன் மூலம் அதிகளவில் முட்டியிடும் பெண் மலைப்பாம்புகளை கண்டறிந்து அவற்றை உற்பத்தி செய்ய விடாமல் தடுப்பதே அந்த திட்டமாகும்.
அதனை செயல்படுத்தும் விதமாக புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் வசித்து வந்த பெண் மலைப்பாம்பை ஒன்றினை பிடிக்க நிபுணர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் 20 நிமிட போராட்டத்திற்கு பிறகு அந்த மலைப்பாம்பு பிடிபட்டிருக்கிறது.இதனையடுத்து ஆய்வு கூட்டத்தில் வைத்து நடத்தப்பட்ட சோதனையில், 18 அடி நீளமும், 98 கிலோ எடையும் கொண்டதாகவும், அதன் வயிற்றிக் 122 முட்டைகள் இருப்பதாகவும் புளோரிடாவின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளனர்.
Watch the largest Burmese python ever caught in Florida press conference from today here: https://t.co/enUwvAUvTv pic.twitter.com/sZTpsuyaVO
— Conservancy of SWFL (@ConservancySWFL) June 22, 2022
இனப்பெருக்க காலத்தில் அதிகளவிலான முட்டைகளை உற்பத்தி செய்த மலைப்பாம்பு என்ற சாதனையை இந்த பாம்பு பிடித்திருக்கிறது என்றும், இது தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்தவை என்றும் புளோரிடா ஆராய்ச்சியாளர் கூறியுள்ளனர்.
kidhours – Tamil Kids Website
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.