Tamil Kids Weather News உலக காலநிலை
ஈரான் நாட்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி இதுவரையில் 22 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈரானில் பல வருடங்களாக வறட்சியை சந்தித்து வந்த தெற்கு பராஸ் மாகாணத்தில் பருவ நிலை மாற்றத்தின் விளைவால் நேற்று முன்தினம் திடீரென கனமழை கொட்டித்தீர்த்தது. அந்த மாகாணத்தின் எஸ்தாபன் நகரில் இடைவிடாமல் கொட்டிய கனமழையால் அங்குள்ள நீர்நிலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்து கரைபுரண்டோடியது.
![திடீர் வெள்ளம் Tamil Climate News # Tamil Kids Weather News # World Top Tamil Weather News Today 1 Tamil Kids Weather News](https://www.kidhours.com/wp-content/uploads/2022/07/Untitled-design-2022-07-24T231738.895.jpg)
மேலும் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன போக்குவரத்து தடை போட்டுள்ளது.இந்த திடீர் வெள்ளத்தால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது.
இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கி 22 பேர் உயிரிழந்ததாகவும், 6 பேர் மாயமாகி உள்ளதாகவும் பராஸ் மாகாணத்தின் ஆளுநர் யூசுப் கரேகர் கூறினார்.வெள்ளத்தில் சிக்கிய டஜன் கணக்கானோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருவதாக கூறினார்.
முன்னதாக கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் பராஸ் மாகாணத்தில் இதே போல் திடீர் வெள்ளம் ஏற்பட்டதில் 44 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.
kidhours – Tamil Kids Weather News உலக காலநிலை
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.