Tuesday, January 7, 2025
Homeசிறுவர் செய்திகள்அதிர்ச்சி உலகை அச்சுறுத்தும் 8 வைரஸ்கள் Warning 8 Virus

அதிர்ச்சி உலகை அச்சுறுத்தும் 8 வைரஸ்கள் Warning 8 Virus

- Advertisement -

Warning 8 Virus சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

கொரோனா குறித்த அச்சம் மக்களிடம் இன்னமும் உள்ள நிலையில் கொரோனா உள்ளிட்ட புதிய 8 வைரஸ்கள் குறித்த பகீர் தகவலை சீன விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பேரழிவை ஏற்படுத்தியது. 2-வது அலை, 3-வது அலை என அலை அலையாய் வந்து அச்சுறுத்திய கொரோனா பின்னர் படிப்படியாக கட்டுக்குள் வந்தது.தற்போது இயல்பு நிலைக்கு திரும்பினாலும் கொரோனா குறித்த அச்சம் மக்களிடம் இன்னமும் உள்ளது. இந்த நிலையில் மற்றொரு அதிர்ச்சி தகவலை சீன விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

- Advertisement -

தெற்கு சீனாவில் அமைந்துள்ள வெப்பமண்டல தீவான ஹைனானில் இதுவரை கண்டிராத 8 வைரஸ்களை சீனாவின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.இந்த ஆய்வை சீன மருத்துவ அறிவியல் அகாடமி மற்றும் பீக்கிங் யூனியன் மருத்துவக் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்.

- Advertisement -

இந்த வைரஸ் இனங்கள் பெருகினால் மனிதர்களைத் தாக்கும் அபாயம் உள்ளது என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு காரணமான சார்ஸ்-கோவி-2 உடன் தொடர்புடைய வைரசும் இதில் அடங்கும். 341 வகையான பூச்சிகளில் இருந்து எடுக்கப்பட்ட 682 மாதிரிகளில் இந்த வைரஸ்களை அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.இதுகுறித்து விஞ்ஞானி ஒருவர் கூறுகையில்,

ஹைனானில் வசிக்கும் கொறித்துண்ணி பூச்சிகளிடமிருந்து 700-க்கும் மேற்பட்ட மாதிரிகளை நாங்கள் ஆய்வு செய்தோம், மேலும் 8 வைரஸ்களைக் கண்டறிந்தோம். வைரஸ்களில் ஒன்று, கொரோனா வைரஸின் அதே குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த வைரஸ்கள் கொறித்துண்ணி பூச்சிகளில் காணப்பட்டன.

Warning 8 Virus சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Warning 8 Virus சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இந்த வைரஸ் எப்போதாவது பரவத்தொடங்கினால் மனிதர்களை அதிகமாக பாதிக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவித்தார் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்களில், ஒன்று கோவிஎச்.எம்.யு-1 எனப்படும் புதிய கொரோனா வைரஸ் என அடையாளம் காணப்பட்டது. இது கொரோனாவுக்கு காரணமான அதே குழுவைச் சேர்ந்தது.

கூடுதலாக, பல புதிய நோய்க்கிருமிகள் வெவ்வேறு வைரஸ் வகைகளில் கண்டறியப்பட்டன. விஞ்ஞானிகள் கண்டுபிடித்த வைரஸ்களில் மஞ்சள் காய்ச்சல் மற்றும் டெங்கு போன்ற வைரஸ்களுடன் தொடர்புடைய இரண்டு புதிய பூச்சி வைரஸ்கள், ஒரு புதிய ஆஸ்ட்ரோவைரஸ், இது வயிற்றுப் பூச்சிகள் போன்ற தொற்றுநோய்களை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது.

அதோடு 2 புதிய பார்வோ வைரஸ்கள், இது காய்ச்சலைப் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். 2 புதிய பாப்பிலோமா வைரஸ்கள், அவை பிறப்புறுப்பு மருக்கள் மற்றும் மனிதர்களில் சில புற்றுநோய்கள் போன்ற நிலைமைகளுடன் தொடர்புடைய வைரஸ்கள்.

ராட்சத எலி மற்றும் சிக்கிம் எலி ஆகிய 2 எலி இனங்களில் புதிய பூச்சி வைரஸ்கள் மற்றும் பார்வோ வைரஸ்கள் இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

 

Kidhours – Warning 8 Virus

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.