Friday, January 24, 2025
Homeசிறுவர் செய்திகள்2,60,000 யூரோக்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ள கிராமம் Village to be Sold

2,60,000 யூரோக்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ள கிராமம் Village to be Sold

- Advertisement -

Village to be Sold  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

ஸ்பெயினில் கிராமம் ஒன்று 2,60,000 யூரோக்களுக்கு விற்பனைக்கு தயாராக இருப்பதாக வெளியிடப்பட்ட விளம்பரம் வைரலாகி வருகிறது.

ஸ்பெயின் நாட்டில் சால்டோ டி காஸ்ட்ரோ என்ற கிராமம் அமைந்துள்ளது. மெட்ரிட் நகரில் இருந்து மூன்று மணி நேர பயண தூரத்தில் சால்டோ கிராமம் உள்ளது.

- Advertisement -

ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகள் நாடுகளின் எல்லை அமைந்துள்ள இந்த கிராமம் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.

- Advertisement -
Village to be Sold  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Village to be Sold  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இந்த கிராமத்தில் 44 வீடுகள், ஹோட்டல், தேவாலயம், பள்ளிக்கூடம், நகராட்சி நீச்சல் குளம், விளையாட்டு மைதானம், காவலர் முகாம்கள் ஆகியவை உள்ளன. ஆனால் மக்கள் யாரும் இல்லாததால் இவை அனைத்துமே எவ்வித பாரமரிப்புமின்றி இருந்து வருகிறது.

இந்நிலையில் 2,60,000 யூரோக்களுக்கு இந்த கிராமம் விற்பனைக்கு இருப்பதாக அதன் உரிமையாளர் ஒரு விளம்பரத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

22 ஆண்டுகளுக்கு முன்பு சால்டோ டி காஸ்ட்ரோ கிராமத்தை சுற்றுலாத் தலமாக மாற்றும் நோக்கத்துடன் அதன் உரிமையாளர் வாங்கியுள்ளார். ஆனால், 2008 ஆம் ஆண்டு நிதி நெருக்கடியால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இதுகுறித்து 80 வயதாகும் அந்த கிராமத்தின் உரிமையாளர் கூறுகையில் “நான் நகரத்தில் வசிப்பவன் மற்றும் கிராமத்தை பராமரிக்க முடியாததால் விற்கிறேன்; ஒருவேளை இதனை சுற்றுலா தளமாக மாற்றும் வாய்ப்பு கிடைத்தாலும் செய்ய விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

 

Kidhours – Village to be Sold

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.