Tamil Kids Use Mobile Phone சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பொதுவாக, செல்போன்கள் வெடிக்கும் பொருள் கிடையாது. அதில் இருக்கும் பேட்டரிதான் வெடிக்க்ககூடிய சாதனம் ஆகும்.
எனவே பேட்டரியை முறையாக பராமரித்தாலே செல்போன் வெடிப்பை தவிர்க்கலாம்.
நாம் செல்போன் வாங்கும் போது அதனுடன் சார்ஜரும் வழங்கப்படும். குறிப்பிட்ட செல்போனில் இருக்கும் பேட்டரியின் திறனுக்கு ஏற்ற சார்ஜர் அதுதான்.
அந்த ஒரிஜினல் சார்ஜர்களை பயன்படுத்தும் போது பேட்டரியின் வெப்பநிலை சீராக இருக்கும். ஆனால், குறைந்த திறன் கொண்ட பேட்டரிக்கு அதிக திறன் கொண்ட சார்ஜரை பயன்படுத்தும் போது சமநிலையற்ற வெப்பநிலை ஏற்பட்டு பேட்டரி வெடிக்கிறது.
அதேபோல், சார்ஜ் போட்டு பேசுவதும் ஆபத்தானதுதான். சார்ஜ் போட்டு பேசும் போது செல்போனுக்கு அதிக சிக்னல்கள் தேவைப்படுகிறது. அப்போது சார்ஜ் போட்டிருக்கும் பட்சத்தில் செல்போனுக்கு பாயும் வோல்ட் அளவில் நிலையற்ற தன்மை ஏற்படுகிறது.
இதுவும் பேட்டரியின் வெப்பநிலையை அதிகரித்து வெடிக்கச் செய்துவிடும். இதுபோல், நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகளை தவிர்த்தாலே செல்போன் வெடிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.
kidhours – Tamil Kids Use Mobile Phone
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.