Ukraine Flood Situation உக்ரைன் வெள்ளத்தில்
ரஷ்ய கட்டுப்பாட்டிலுள்ள “கெர்சன்” மாகாணத்தை மீண்டும் கைப்பற்ற, உக்ரைன் படைகள் கடுமையாகப் போராடிவருகின்றது.
இவ்வாறான நிலையில், அங்குள்ள நோவா கக்கோவா அணையை ரஷ்யா வெடி வைத்து தகர்க்கத் திட்டமிட்டுள்ளதாக, அதிபர் செலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
அணை தகர்க்கப்படும் பட்சத்தில், பல உக்ரைனிய மாகாணங்கள் வெள்ளக்காடாக மாறும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த முயற்சியை கைவிடும்படி, ரஷ்யாவை எச்சரிக்குமாறு, மேற்கத்திய நாடுகளுக்கு அதிபர் செலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.