Traditional Drinks For Summer மூலிகைகளை சேகரிப்போம்
1.வாட்டர் மெலன் – புதினா ஜூஸ்
தேவையான பொருள்கள்
வாட்டர்மெலன் துண்டுகள் – 1 கப்,
புதினா இலைகள் – 6,
உப்பு – 1 சிட்டிகை,
சர்க்கரை (அ) தேன் – சுவைக்கேற்ப,
ஊறவைத்த சப்ஜா விதை – 1 ஸ்பூன்
செய்முறை
வாட்டர் மெலன் துண்டுகளை விதைகளை நீக்கிவிட்டு, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதோடு புதினா இலைகள் 4, சிட்டிகை அளவு உப்பு சேர்தது அதோடு அரை டமள்ர் மட்டும் தண்ணீர் சேர்த்து நன்கு ஜூஸாக அரைத்துக் கொள்ளுங்கள்.
பெரியவர்கள் சர்க்கரையே சேர்க்கத் தேவையில்லை குழந்தைகளுக்கு வேண்டுமானால் சிறிது தேனோ அல்லது சர்க்கரையோ சேர்த்து கொடுக்கலாம்.
அரைத்த ஜூஸை ஒரு டம்ளரில் ஊற்றி அதோடு 4 புதினா இலைகளும் ஊறவைத்த சப்ஜா மற்றும் சில ஐஸ் கட்டிகளையும் சேர்த்து குடிக்கலாம். வெயில் காலத்தில் குடிக்க உடலும் குளிர்ச்சியாகும். உடல் நல்ல நீர்ச்சத்துடன் இருக்கும். தாகமும் தீரும்.
2.பாதாம் பிசின் பாயசம்
தேவையான பொருள்கள்
பாதாம் பசின் – 5-6 துண்டு
முந்திரி பொடி – 4 ஸ்பூன்
நாட்டுச் சர்க்கரை -அரை கப்
தேங்காய் துருவல் – அரை கப்
ஏலக்காய் பொடி – கால் ஸ்பூன்,
பூசணி விதை – 1 ஸ்பூன்
வெள்ளரி விதை -1 ஸ்பூன்
வெள்ளை எள் – 1 ஸ்பூன்,
செய்முறை
தேங்காயை நன்கு துருவி அதில் சிறிது தண்ணீர் விட்டு, அதோடு எள்ளும் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி பாலெடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
தேங்காய் பாலில் முதல் நாளே தண்ணீரில் ஊறவைத்த பாதாம் பிசினையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். கட்டிகட்டியாக இல்லாமல் இருக்க இதையும் மிக்ஸியில் லேசாக அரைத்துக் கொள்ளலாம்.
இந்த கலவையுடன் முந்திரி பொடி, ஏலக்காய் பொடி, பூசணி விதை, வெள்ளரி விதை, நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றைக் கலந்து எடுத்தால் சுவையான பாதாம் பிசின் பாயசம் ரெடி.
இதை அடுப்பில் வைக்கவே தேவையில்லை. அதிக கெட்டியாக இருப்பது போல் இருந்தால் வேண்டுமானால் சிறிது தேங்காய் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளலாம். மேலே ஊறவைத்த சப்ஜா விதைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
Kidhours – Traditional Drinks For Summer
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.