Collapsed Suspension Bridge சிறுவர்களுக்கான உலக செய்திகள்
குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 91ஆக உயர்வடைந்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த பாலம் அறுந்து விழுந்ததால் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றில் நூற்றுக்கணக்கானோர் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகுதியளவு நீரில் மூழ்கிய தொங்கு பாலத்தில் மக்கள் தொங்கிக்கொண்டிருப்பது போன்ற காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தன.

சம்பவத்தின் போது 400 பேர் கட்டடத்தில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் குறித்த தொங்கு பாலம் பழுதுபார்க்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் திறக்கப்பட்ட சில நாட்களில் மீண்டும் அறுந்து விழுந்துள்ளது.
இதேவேளை, இந்த சம்பவத்துக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.
Kidhours – Collapsed Suspension Bridge
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.