Titanic Ship Menu Card சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலக அளவில் பிரபலமானதாக கருதப்படும் டைட்டானிக் கப்பலின்( Titanic Ship ) மெனு கார்டு( Menu Card ) ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறை மீது மோதி விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது.
இந்நிலையில் டைட்டானிக் கப்பலின் 112 ஆண்டுகள் பழமையான மெனு கார்டு ஒன்று பாசினேட்டிங் என்ற பெயரில் எக்ஸ்( Twitter ) தளத்தில் பகிரப்பட்டுள்ளதுடன் அந்த மெனு கார்டில் கப்பலின் முதல் மற்றும் மூன்றாம் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட மெனு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதிய உணவு மற்றும் புபே( Buffet ) முதல் காலை உணவு வரை பல்வேறு உணவு வகைகள் அதில் இடம்பெற்றுள்ளன.
மேலும் முதல் வகுப்பிற்கான மெனுவில் பில்லட்ஸ் ஆப் பிரில், கார்ண்ட் பீப், காய்கறி வகைகள் மற்றும் பாலாடைகள், வறுக்கப்பட்ட மட்டன் சாப்ஸ், பிசைந்த, வறுத்த மற்றும் வேக வைத்த உருளைக்கிழங்கு, கஸ்டர்டு புட்டிங் மற்றும் ஆப்பிள் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு புபே வகையில் பானை இரால், நார்வேஜியன் நெத்திலிகள், ஜூஸ்ட், மத்தி, வறுத்த மாட்டிறைச்சி மற்றும் பல்வேறு கோழி உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன.
மூன்றாம் வகுப்பிற்கான மெனுவில் ஓட்ஸ் கஞ்சி மற்றும் பால், ஜாக்கெட் உருளைக்கிழங்கு, ஹாம் மற்றும் முட்டை, ரொட்டி மற்றும் வெண்ணெய், தேநீர் அத்தோடு காலை உணவாக காபி ஆகியவை அடங்கும்.இரவு உணவில், அரிசி சூப், ரொட்டி, பழுப்பு குழம்பு, இனிப்பு சோளம், பிளம்ப் புட்டிங், இனிப்பு சாஸ், குளிர் இறைச்சி, பாலாடை கட்டி மற்றும் சுண்ட வைத்த அத்தி பழங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
அத்தோடு டைட்டானிக் கப்பலில் பயணம் செய்த 1500 இற்கும் மேற்பட்டோர் பலியாகியதோடு இந்த விபத்து தொடர்பாக தற்போதும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Kidhours – Titanic Ship Menu Card
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.