Osho’s Mottoes
1.நீங்கள் எந்த அளவு உயிர்ப்புடன் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்குத் தன்னை அறிய முடியும். நீங்கள் உயிர்ப்புடன் இல்லாவிடில், வாழ்க்கையை அறியவே முடியாது
2.இதுவரை கேட்டது 5 அனைத்தையும் மறந்துவிடு. உனது கோப்பையைக் காலி- யாக வைத்திரு!
3.இருள் என்ற ஒன்று இல்லை. வெளிச்சத்தை எடுத்துச் செல், இருள் மறைந்துவிடும். இருள் இருக்கிறதா?
4.சிலவற்றைப் பார்க்கும்போது உங்களுக்கு அழகாய் தெரிகிறது. அப்படியானால் உங்களுக்குள் அழகு இருக்கிறது!
5.ஒருவரது கண்ணைப் பார்க்கும்போது உங்கள் இதயத்தை உங்கள் கண்ணுக்குக் கொண்டு வாருங்கள்!
6.அனைத்தையும் குழந்தையின் பார்வையில் பாருங்கள்- குழப்பம் இருக்காது!
7.வாழ்க்கை தருவது யாவும் சரியானதே! வாழ்க்கை பறித்துக் ம் கொள்வது யாவும் சரியானதே!
8.அன்பு வெறுப்பு இல்லாமல் அமைந்திராது! நீ விரும்புகிற நபரையே தான் வெறுக்கவும் செய்வாய்.
9.செருப்பு பொருந்தியதும் கால்களை மறந்துவிடுகிறோம்!
10.என்ன செய்வது என்பது கேள்வி அல்ல! எதையும் எப்படிப் பார்ப்பது என்பதுதான் கேள்வி!
11.எல்லா ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருக்கிறாள். எல்லா பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் இருக்கிறான். ஏனென்றால் ஆணும் பெண்ணும் சேர்ந்து உருவாக்கியது தான் ஆணும் பெண்ணும்! இதில் ஆண் யார்? பெண் யார்?
12.நண்பன் என்பவன் குறைந்த அளவு பகைமை கொண்டவன். பகைவன் என்பவன் குறைந்த அளவு நட்பு கொண்டவன்.
13.பேசும்போது பயப்படாதீர்கள்! பயப்படும்போது பேசாதீர்கள்!
14.எல்லாவித ஆனந்தங்களும் தற்காலிகமானதாக இருக்கும் போது தண்டனை மட்டும் எப்படி நிரந்தரமாக இருக்க முடியும்?
15.ரசித்ததைப் பாராட்டாதவன் கலைக் கொலைகாரன்!
16.உனக்காகப் பொய் சொல்பவன், உனக்கு எதிராகவும் பொய் சொல்வான்.
17.நேராக வளரும் மரம் தான் முதலில் வெட்டப்படும்.
18.உன்னை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை, அதேபோல உன்னை விட தாழ்ந்தவர்கள் யாரும் இல்லை என்பதை நீ ஏற்றுக் கொள்ளுதலே உண்மையான எழுச்சியாகும்.
Kidhours – Osho’s Mottoes
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.