Thirukkural Translation திருக்குறளின் சிறப்புகள்
பப்புவா நியூ கினி என்ற தீவு நாட்டில் டோக் பிசின் என்ற மொழி பேசப்படுகிறது. இந்த மொழியிலும் அய்யன் வள்ளுவன் படைத்த திருக்குறளை மொழிபெயர்த்து அசாத்திய திறமையை வெளிப்படுத்தி உள்ளனர் சிவகாசியை பூர்விகமாக கொண்ட தம்பதி. சிவகாசியைச் சேர்ந்த சசிந்திரன் முத்துவேல் இந்தியாவில் படித்து விட்டு பணி நிமித்தமாக பப்புவா நியூ கினிக்கு சென்றார்.
அங்குள்ள மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத்தின் ஆளுநராகவும் இவர் தற்போது உள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு நடந்த பப்புவா நியூ கினி தேர்தலில் சசிந்திரன் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். அந்நாட்டு வரலாற்றில் முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் எம்.பியான பெருமையை சசிந்திரன் பெற்றுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் மீண்டும் எம்.பி ஆக தேர்வு செய்யப்பட்டார்.
மூன்றாவது முறையாக கடந்தாண்டு நடந்த தேர்தலிலும் எம்பியாக தேர்வானார்.குறளை தோக் பிசின் மொழியில் மொழி பெயர்க்க எடுத்த முயற்சிக்காக மேற்கு புதிய பிரிட்டன் மாகாண ஆளுநர் @pngsasi மற்றும் திருமதி சுபா சசீந்திரன் ஆகியோரைப் பாராட்டுகிறேன். ஆளுநர் சசிந்திரன் தனது பள்ளி படிப்பை தமிழில் கற்று தேர்ந்துள்ளார்.

அயலகத்தில் சென்று தங்கினாலும் அங்கும் பல முன்னேற்ற திட்டங்களை முன்னெடுத்த சசிந்திரனுக்கு 2014ஆம் ஆண்டு இந்திய அரசு Pravasi Bharatiya Samman என்ற விருதை அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கி கவுரவித்தார். சசிந்திரனின் மனைவி சுபாவும் மொழி ஆளுமை மிக்கவரவாக திகழ்கிறார். இருவரும் இணைந்து திருக்குறளை டோக் பிசின் என்ற மொழியில் மொழிபெயர்க்க உதவினர்.
இவர்கள் மொழிபெயர்த்த திருக்குளை வெளியிட்ட பிரதமர் மோடி, இருவரையும் மனதாரப் பாராட்டினார். திருக்குறள் புத்தக வெளியீட்டு விழாவிற்கு தமிழப் பெண்களின் பாரம்பரிய உடையான சேலை அணிந்து சுசிந்திரனின் மனைவி சுபா பங்கேற்றார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பப்புவா நியூ கினியில் வாழ்ந்து வரும் சசிந்திரன், அந்நாட்டு மக்களால் தேர்தலில் வாக்களித்து ஆளுநராக தேர்வு செய்யப்பட்டவர்.
Kidhours – Thirukkural Translation
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.