Thirukkural 537 தினம் ஒரு திருக்குறள் கற்போம்
பொருட்பால் / அரசியல் / பொச்சாவாமை
”அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்.”
மறவாமை என்னும் கருவியினாலே எதனையும் பேணிச் செய்தால், செய்வதற்கு அரியன என்று நினைத்துக் கைவிடும் செயல்களும் இல்லையாகும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)
மறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்) போற்றிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை.
—மு. வரதராசன்
மறதி இல்லாத மனத்தால் எண்ணிச் செய்தால் ஒருவருக்குச் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை.
—சாலமன் பாப்பையா
![''அரியஎன்று ஆகாத இல்லைபொச்....'' தினம் ஒரு திருக்குறள் கற்போம்Thirukkural 537 1 Thirukkural 537 தினம் ஒரு திருக்குறள் கற்போம்](https://www.kidhours.com/wp-content/uploads/2024/02/thinam-oru-kural-kidhours-4-1-1-1-1-1-2-1-1.jpg)
மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை
—மு. கருணாநிதி
Kidhours – Thirukkural 537
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.