Thirukkural 509 தினம் ஒரு திருக்குறள் கற்போம்
பொருட்பால் / அரசியல் / தெரிந்து தெளிதல்
”தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள். ”
ஆராயாமல் யாரையுமே நம்புதல் வேண்டாம்; ஆராய்ந்து நம்பியதன் பின்னால், அவர் சொல்லும் பொருள்களை நல்லவையாகவே நம்புதல் வேண்டும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)
யாரையும் ஆராயாமல் தெளியக்கூடாது, நன்றாக ஆராய்ந்த பின்னர் அவரிடம் தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்.
—மு. வரதராசன்
எவரையும் ஆராயாமல் பதவியில் அமர்த்த வேண்டா; ஆராய்ந்த பிறகு தேர்ந்தவற்றின்மேல் சந்தேகம் கொள்ளவும் வேண்டா.
—சாலமன் பாப்பையா
நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும் ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பிவிடக் கூடாது
—மு. கருணாநிதி
Kidhours – Thirukkural 509
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.