Thirukkural 508 தினம் ஒரு திருக்குறள் கற்போம்
பொருட்பால் / அரசியல் / தெரிந்து தெளிதல்
”தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.”
தெளிவாக ஆராயாமல் ஒருவனைத் துணையாக நம்பியவனுக்கு அவனுக்கு மட்டுமின்றி அவன் வழிமுறையில் வருபவர்களுக்கும், தீராத துன்பம் உண்டாகும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)
மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.
—மு. வரதராசன்
நாட்டுச் சிந்தனைகளில் பற்று இல்லாதவனை, அவன் பின்னணி பற்றி ஆராயாது பதவியில் அமர்த்தினால் அச்செயல் நீங்காத துன்பத்தைத் தரும்.
—சாலமன் பாப்பையா
![''தேரான் பிறனைத் தெளிந்தான்.....'' தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 508 1 Thirukkural 508 தினம் ஒரு திருக்குறள் கற்போம்](https://www.kidhours.com/wp-content/uploads/2024/01/thinam-oru-kural-kidhours-4-1-1-1-1-1-2-1-1.jpg)
ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்து, அமர்த்திக் கொண்டால் அவரால் வருங்காலத் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பம் விளையும்
—மு. கருணாநிதி
Kidhours – Thirukkural 508
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.