Thirukkural 500 தினம் ஒரு திருக்குறள் கற்போம்
பொருட்பால் / அரசியல் / இடன் அறிதல்
”காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.”
போர்க்களத்தில் வேலேந்திய வீரரையும் கோத்து எடுத்த கொம்புடைய அஞ்சாத களிற்றையும், அதன் கால் ஆழ்கின்ற சேற்று நிலத்தில், சிறுநரிகள் கொன்றுவிடும் ‘
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)
வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நில்த்தில் அகப்பட்ட போது நரிகள் கொன்றுவிடும். ‘
—மு. வரதராசன்
பாகனுக்கு அடங்காததும், தன்னை எதிர்த்துப் பிடித்த வீரனைத் தன் தந்தத்தால் தாக்கித் தூக்கியதுமான ஆண்யானை, கால் புதையும் சேற்றில் சிக்கிக் கொண்டால், நரிகூட அதைக் கொன்றுவிடும். ‘
—சாலமன் பாப்பையா
![''காலாழ் களரில் நரியடும் ....'' தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 500 1 Thirukkural 500 தினம் ஒரு திருக்குறள் கற்போம்](https://www.kidhours.com/wp-content/uploads/2024/01/thinam-oru-kural-kidhours-4-1-1-1-1-1-2-1-1.jpg)
வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை, சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூடக் கொன்று விடும் ‘
—மு. கருணாநிதி
Kidhours – Thirukkural 500
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.