Thirukkural 466 தினம் ஒரு திருக்குறள் கற்போம்
பொருட்பால் / அரசியல் / தெரிந்து செயல் வகை
“செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானுங் கெடும் :
செய்யத் தகுந்தது அல்லாது ஒரு செயலைச் செய்தாலும் பொருள் கெடும்; செய்யத் தகுந்த செயலைச் செய்யாமையாலும் பொருள் கெடும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)
ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.
—மு. வரதராசன்
செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் அழிவு வரும்.
—சாலமன் பாப்பையா
செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்
—மு. கருணாநிதி
Kidhours – Thirukkural 466
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.