Thirukkural 463 தினம் ஒரு திருக்குறள் கற்போம்
பொருட்பால் / அரசியல் / தெரிந்து செயல் வகை
“ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.”
வரப்போவதாகக் கருதும் ஆக்கத்தை எண்ணி, செய்துள்ள முதலீட்டையும் இழக்கின்ற முயற்சியினை அறிவுடையவர்கள் ஒரு போதும் மேற்கொள்ள மாட்டார்கள்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)
பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார்.
—மு. வரதராசன்
வரும் லாபத்தை எண்ணி, இருக்கும் முதலையும் இழந்துவிடுவதற்கு ஏற்ற செயலை அறிவுள்ளவர் செய்யமாட்டார்.
—சாலமன் பாப்பையா
!["ஆக்கம் கருதி முதலிழக்கும்....." Thirukkural 463 1 Thirukkural 463 தினம் ஒரு திருக்குறள் கற்போம்](https://www.kidhours.com/wp-content/uploads/2023/12/thinam-oru-kural-kidhours-4-1-1-1-1-1-2-1.jpg)
பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்
—மு. கருணாநிதி
Kidhours – Thirukkural 463
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.