Thirukkural 437 தினம் ஒரு திருக்குறள் கற்போம்
பொருட்பால் / அரசியல் / குற்றங்கூறாமை
”செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.”
செல்வம் பெற்ற போது அதனாலே செய்ய வேண்டிய செயல்களைச் செய்யாமல் தவறியவனுடைய செல்வமானது, நிலைக்கும் தன்மையற்று, அழியும் ‘
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)
செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும். ‘
—மு. வரதராசன்
செல்வத்தால் தனக்குச் செய்து கொள்ள வேண்டியவற்றைப் பொருள்மீது கொண்ட பற்றினால் செய்யாமல், கஞ்சனாய் வாழும் ஆட்சியாளனின் செல்வம் வீணே கெட்டு, அழிந்து போகும். ‘
—சாலமன் பாப்பையா
நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும் ‘
—மு. கருணாநிதி
Kidhours – Thirukkural 437
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.