Thirukkural 419 தினம் ஒரு திருக்குறள் கற்போம்
பொருட்பால் / அரசியல் / கேள்வி
”நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.”
நுண்மையான கேள்வி அறிவைப் பெறாதவர்கள், தாம் வணக்கமாகப் பேசும் வாயினர் ஆகுதல் அருமையே! கேள்வியறிவு பெற்றவர்கள் பணிவாகவே பேசுவார்கள்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)
நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.
—மு. வரதராசன்
நுண்ணிய கேள்வி ஞானம் இல்லாதவர், பணிவுமிக்க சொற்களைப் பேசுபவராக ஆவது கடினம்.
—சாலமன் பாப்பையா
தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது
—மு. கருணாநிதி
Kidhours – Thirukkural 419
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.