Thirukkural 336 தினம் ஒரு திருக்குறள் கற்போம்
“நெருநல் உளனொருவன் இன்றில்லை” என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.”
‘நேற்று உள்ளவனாக இருந்த ஒருவன், இன்று இல்லை’ என்னும் நிலையாமையாகிய பெருமையை உடையது தான் இந்த உலகம் ஆகும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)
நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.
—மு. வரதராசன்
நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம்.
—சாலமன் பாப்பையா

இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாகப் கொண்டதாகும்
—மு. கருணாநிதி
Kidhours – Thirukkural 336
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.