Thirukkural 33 Explain தினம் ஒரு திருக்குறள்
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
![தினம் ஒரு திருக்குறள் கற்போம்... Thirukkural 33 # Tamil Best Thirukkural 33 Explain 1 Thirukkural 33 Explain தினம் ஒரு திருக்குறள்](https://www.kidhours.com/wp-content/uploads/2022/10/thinam-oru-kural-kidhours-4.jpg)
நம்மாலே முடிந்த வகைகளில் எல்லாம், முடியக்கூடிய வழிகளில் எல்லாம், அறச் செயல்களை இடைவிடாமல் தொடர்ந்து செய்து வருதல் வேண்டும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)
செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.
—மு. வரதராசன்
இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க.
—சாலமன் பாப்பையா
செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்
—மு. கருணாநிதி
Kidhours – Thirukkural 33 Explain
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.