Saturday, November 23, 2024
Homeதிருக்குறள்தினம் ஒரு திருக்குறள்"இலர்பல ராகிய காரணம்....." தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 270

“இலர்பல ராகிய காரணம்…..” தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 270

- Advertisement -

Thirukkural 270 தினம் ஒரு திருக்குறள் கற்போம்

- Advertisement -

அறத்துப்பால்/ துறவறவியல் / தவம்

 

“இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.”

 

- Advertisement -

உலகில் மெய்யறிவு அற்றவர்கள் பலராகியதன் காரணம், தவம் செய்பவர் சிலராகவும், தவம் செய்யாதவர் பலராகவும் இருப்பதுதான்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)

- Advertisement -

ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.
—மு. வரதராசன்

பிறர் செய்யும்தீமைகளைப் பொறுத்துக் கொள்வதும், அவர்க்குத் தீமை செய்யாது இருப்பதும் ஆகிய தவத்தைச் செய்பவர் சிலர்; செய்யாதவர் பலர்; ஏதுமற்ற ஏழைகள் பலராக இருப்பதற்கு இதுவே காரணம்.
—சாலமன் பாப்பையா

Thirukkural 270 தினம் ஒரு திருக்குறள் கற்போம்
Thirukkural 270 தினம் ஒரு திருக்குறள் கற்போம்

ஆற்றலற்றவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம், மன உறுதி கொண்டவர் சிலராக இருப்பதும், உறுதியற்றவர் பலராக இருப்பதும் தான்
—மு. கருணாநிதி

 

Kidhours –  Thirukkural 270

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.