Habits of Dogs தேடல்
நாய்கள் சில சமயங்களில் கார்களின், மோட்டார் சைக்கிள்களின் பின்னால் ஓடி வருவதை நாம் கவனித்திருப்போம். அதற்கு என்ன காரணம் என்று என்றாவது யோசித்திருக்கிறோமா?
திடீரென்று நாய்கள் வாகனங்களை துரத்தி வர சில காரணங்களை கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.
நாய்களுக்கு வாசனை உணர்வு அதிகம் உள்ளது. நாய்கள் பொதுவாக மற்றொரு நாயின் வாசனையை விரைவாக கண்டறியுமாம்.
உங்கள் கார் அல்லது பைக்கில் நாய்கள் சிறுநீர் கழிப்பதை பார்த்திருப்போம்.
அந்த வாகனங்கள்வீதி வழியாக செல்லும் போதெல்லாம் மற்றைய நாய்கள் அந்தவாசனையை உணர்ந்து காருக்கு பின்னால் குரைத்து வருகின்றன.
நாய்கள் டயர்களில் சிறுநீர் கழிப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு செய்வதால் நாய்கள் ஒரு எல்லையை தங்களுக்குள் ஒரு குறியீடாக செய்கின்றன. இந்த வாடையை வைத்து மற்றைய நாய்களும் அங்கு தங்களது சிறுநீரைபதிக்கின்றன என கூறப்படுகிறது.
மற்றொரு காரணம் டயரின் வாசனை நாய்களுக்கு பிடிக்குமாம். அதே சமயத்தில் ரப்பர் டயர்களில் இந்த சிறுநீர் வாடை அதிக நாட்கள் நீடித்திருக்கும் எனவும் கூறப்படுகிறது.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.