Tamil Kids Technical News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
வாழ்நாள் முழுவதும் பேட்டரியை ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமே இனி இருக்காது. பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் அணுக்கழிவு மூலம் வைர பேட்டரிகளைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
அனைத்து வகையான மின்னணு சாதனங்களுக்கான இந்த பேட்டரிகள் ஆயிரம் ஆண்டுகள் வரை நீடித்திருக்கும்.

ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமிருக்காது. அது தன்னைத்தானே ரீசார்ஜ் செய்து கொள்ளும் என்று கூறப்படுகிறது.
இதன் மூலம் அணுக் கழிவுகளை நீக்கவும் வழி பிறக்கிறது.
இதன்போது பேஸ் மேக்கர் மற்றும் சென்சார் கருவிகளுக்கான முதல் டைமண்ட் ரேடியோ ஆக்டிவ் டைமண்ட் மைக்ரோ பேட்டரியை வர்த்தக ரீதியாக அடுத்த ஆண்டு இறுதியில் சந்தைப்படுத்தவும் Arkenlight என்ற பிரிட்டன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.