WhatsApp Update சிறுவர்களுக்கான உலக செய்திகள்
வாட்ஸ் அப்பில் இனி ஒரே நேரத்தில் 32 பேர் வரை பேசலாம் என்ற புதிய அப்டேட்டை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய அப்டேட் வாட்ஸ் அப் நிறுவனம் தன்னுடைய பயனர்களை தொடர்ந்து ஈர்ப்பில் வைத்துக் கொள்வதற்காக பல்வேறு புதிய அப்டேட்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் அடிக்கடி வழங்கி வருகிறது.
வாட்ஸ் அப்பில் குழு அரட்டை, குழு வாய்ஸ் கால், வீடியோ கால் வசதி போன்றவை நீண்ட காலமாக இருந்து வருகிறது.
ஆனால் தற்போது வாட்ஸ் அப் நிறுவனம், ஒரே நேரத்தில் 32 பேர் வரை பேசக்கூடிய ஆடியோ சாட் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த ஆடியோ சாட் அம்சத்தில் குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு மணி ஒலிக்காமல், அதற்கு பதிலாக PUSH NOTIFICATION என்ற அழைப்பு முறை அனுப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆடியோ சாட்டில் உறுப்பினர்கள் இணைந்த பிறகு, குழுவினரால் நேரடியாகவும், குறுஞ்செய்தி அனுப்பவும் முடியும் என தெரியவந்துள்ளது.
ஆனால் குழுவில் 33 முதல் 128 பேர் வரையிலான உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே இந்த ஆடியோ சாட் வசதியை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த ஆடியோ சாட் அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் ஆகிய 2 தளங்களிலும் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kidhours – WhatsApp Update
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.